“மனைவியை அடிக்க கணவருக்கு ‘லைசென்ஸ்’… ஆனா ஒரு கண்டிஷன்”…. தாலிபான்களின் அதிர வைக்கும் புதிய சட்டம்….!

By Nanthini on மாசி 19, 2026

Spread the love

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பெண்கள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்குச் செல்லவும் தடைகள் உள்ள நிலையில், தற்போது தாலிபான் அரசு வெளியிட்டுள்ள புதிய சட்டத் திருத்தம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்புதிய விதிகளின்படி, கணவன் தனது மனைவியையும் குழந்தைகளையும் உடல் ரீதியாகத் தண்டிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் உள்ள ஒரு வினோதமான நிபந்தனை என்னவென்றால், கணவர் மனைவியை அடிக்கும்போது எலும்புகள் உடையாமலோ அல்லது கடுமையான காயங்கள் ஏற்படாமலோ இருக்க வேண்டும் என்பதாகும். ஒருவேளை பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்தால் மட்டுமே கணவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முந்தைய அரசு கொண்டு வந்திருந்த சட்டங்கள் அனைத்தையும் தாலிபான் அரசு தற்போது ரத்து செய்துள்ளது.

   

இது தவிர, கணவனின் அனுமதி இன்றி மனைவி தனது உறவினர்களைச் சந்திக்கச் சென்றால், அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது. தாலிபான்களின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு ஆப்கானியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.