“என் உயிரை காப்பாற்றியவர் உதயநிதி ஸ்டாலின்” அதை மறக்கவே மாட்டேன்… மேடையிலேயே கண்ணீர் விட்ட வீராங்கனை பவித்ரா..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love
தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விழாவில், வான் தாண்டுதல் (Pole Vault) வீராங்கனை பவித்ரா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்த பேருதவி குறித்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார். பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்த பவித்ராவிற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவானது. அந்த இக்கட்டான சூழலில், உரிய நேரத்தில் தலையிட்ட உதயநிதி ஸ்டாலின், அவரை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக பவித்ரா குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சரின் இந்த துரிதமான நடவடிக்கையால் தான் தான் இன்று உயிரோடு இருப்பதாகவும், விளையாட்டில் மீண்டும் சாதிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். “எனது இக்கட்டான நிலையில் துணை முதலமைச்சர் செய்த இந்த பேருதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்” என பவித்ரா மேடையில் உருக்கமாகக் கூறினார். ஒரு விளையாட்டு வீரரின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட தமிழக அரசின் செயல்பாட்டிற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்றாக அமைந்தது.