“வீட்டுக்கு ஒரு ஓட்டு… இரண்டரை கோடி மக்களின் மனதை வெல்ல விஜய்யின் ‘சைலண்ட்’ அட்டாக்”… அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்….!

By Nanthini on மாசி 17, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் வியூகங்களை வகுப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, மற்ற பிரதான கட்சிகளுக்கு முன்னதாகவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் களத்தில் அதிரடி காட்ட விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தவெக-வின் முழுமையான தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வதற்காக ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்துறையினரைச் சந்தித்துக் கருத்துகளைச் சேகரித்துள்ளனர். மேலும், இணையதளம் வாயிலாகவும் பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இந்த அறிக்கை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அல்லது வேலூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு கூட்டங்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

   

திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் வழக்கமாக வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு மாற்றாக, தவெக-வின் அறிக்கை அமையவுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெறும் இலவசங்களை மட்டும் நம்பியிருக்காமல், தொலைநோக்கு பார்வைகொண்ட திட்டங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய மூன்று துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவருவதே விஜய்யின் முக்கிய இலக்காக உள்ளது.

   

ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில், விஜய்யின் இந்த தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வீட்டுக்கு ஒரு ஓட்டு’ என்ற இலக்குடன் இரண்டரை கோடி வாக்குகளைக் கவரத் துடிக்கும் தவெக, இந்த அறிக்கையின் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது. இது மற்ற கட்சிகளுக்குக் கடும் சவாலாக அமையும் எனப் பார்க்கப்படுகிறது.