“கோபப்படுவதை நிறுத்து தம்பி” மைதானத்தில் வெடித்த மோதல்.. ரூமில் நடந்த சம்பவம்… சூர்யகுமார் & குல்தீப் வெளியிட்ட மாஸ் வீடியோ..!!

By Soundarya on மாசி 17, 2026

Spread the love
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான உலகக்கோப்பை போட்டியின் போது, மைதானத்தில் சூர்யகுமார் யாதவிடம் குல்தீப் யாதவ் ஆவேசமாக நடந்து கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. போட்டியின் ஒரு கட்டத்தில் ஃபீல்டிங் வியூகம் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் சில ஆலோசனைகளை வழங்க முயன்ற போது, குல்தீப் யாதவ் அவரிடம் கோபமாக ஏதோ கத்துவது போன்ற காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகின. இது ரசிகர்கள் மத்தியில் “இருவருக்கும் இடையே மோதலா?” என்ற கேள்வியை எழுப்பியது.

இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக, இருவரும் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், மைதானத்தில் அன்று நடந்த அதே கோபமான காட்சியை மீண்டும் தத்ரூபமாகச் செய்து காட்டி (Recreate), இறுதியில் சிரித்தபடி கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். தாங்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பதையும், மைதானத்தில் நடந்தது விளையாட்டின் ஒரு பகுதியே தவிர தனிப்பட்ட மோதல் அல்ல என்பதையும் இந்த வீடியோ மூலம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். “ஆடுகளத்தில் என்ன நடந்தாலும், வெளியே நாங்கள் எப்போதும் சகோதரர்களே” என்ற செய்தியை இது ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளது.