சமீபத்தில் தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை வந்திருந்தார்.இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக கீர்த்தி சுரேஷ் பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப்பூ சூடிய நிலையில் அவர் தங்கியிருந்த ஒரு பங்களாவில் அறையை விட்டு வெளியே வந்தார். அங்கு நின்றிருந்த காரில் கீர்த்தி சுரேஷ் ஏறப் போனார்.
அப்போது காருக்கு இருந்த ரசிகர் ஒருவர், கீர்த்தி சுரேஷ் என்று அழைக்க அவரை கீர்த்தி சுரேஷ் திரும்பி பார்த்தார். பூ சூப்பரா இருக்குது என்று கமெண்ட் சொல்ல தேங்க்யூ என்று கீர்த்தியும் சொன்னார். பிறகு சுதாரித்த அவர், என்ன பூ சூப்பரா இருக்குதா என்று ஆச்சரியமாக திருப்பிக் கேட்டார். அப்போது சட்டென கீர்த்தி சுரேஷின் முகத்தில் சற்று அதிர்ச்சி வெளிப்பட்டது. போடா என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார்.
காரில் சீட்டில் அமர்ந்தபடி, அடப்பாவி இவ்வளவு ரெடியாகி வந்திருக்கேன். லுக்கு சூப்பரா இருக்குதுன்னு சொல்வான்னு பார்த்தா பூ நல்லா இருக்குதுன்னு சொல்றானேன்னு என்று வாய்விட்டு கியூட்டாக புலம்பிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
