actor sasikumar

நான் உட்கார்ந்த அதே இடத்துல அது நடந்தது… அதை என்னாலே மறக்கவே முடியாது… நடிகர் சசிக்குமார் சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 15, 2026

Spread the love

ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிக்குமார். பிறகு சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் வந்தார். பிறகு நடிகர் தயாரிப்பாளர் என பல படங்களை ரசிகர்களுக்கு தந்தார். இப்போது சசிக்குமார் நடித்த மைலார்ட் படம் திரைக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் கூறியதாவது, நாங்க மதுரையில சொந்தமா தியேட்டர் வெச்சிருந்தோம். அங்க தான் பசங்களோடு உட்கார்ந்து படம் பார்ப்போம்.

அங்கு உட்கார்ந்து மணிக்கணக்கா பேசுறது, படம் வந்தால் பார்க்கிறது எந்த படத்தில் என்ன சீன் வரும்ன்னு எல்லாம் கரெக்ட்டா தெரியும். எங்கே உட்கார்ந்து நான் படம் பார்த்தேனோ அதே தியேட்டர்ல நான் இயக்கிய முதல் படம் சுப்பிரமணியபுரம் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஓடிச்சு. அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதை என்னால மறக்கவே முடியாது என்று இயக்குனர் சசிகுமார் அதில் கூறியிருக்கிறார்.