“இது குவாட்டருக்கும், பிரியாணிக்கும் வந்த கூட்டமல்ல” தளபதியின் கொள்கை கூட்டம்… தவெக நிர்வாகி ராஜ்மோகன் ஆவேசப் பேச்சு….!!

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜ்மோகன், ஆளுங்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆவேசமாகப் பேசியது தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. “அதே டெய்லர்.. அதே வாடகை.. இந்தத் தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ?” என எதிர்க்கட்சியினரின் கிண்டல்களைச் சுட்டிக்காட்டிய அவர், தவெக-வின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என முழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “விஜய்யின் கூட்டத்திற்கு வருபவர்கள் கோட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு வருபவர்கள் அல்ல; இது தலைவனுக்காகவும் அவரது கொள்கைக்காகவும் தானாகத் திரண்டு வரும் கூட்டம்” என்று கூறினார். ராஜ்மோகனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அங்கிருந்த தொண்டர்கள் விசில் அடித்து உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தவெக நிர்வாகிகளின் இத்தகைய ஆவேசப் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.