காலையிலேயே பரபரப்பு..! மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட அதிமுக நிர்வாகி கைது…!!

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை விமர்சித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக, அதிமுக நிர்வாகி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி செந்தில் என்பவர், அதிமுக ஐடி விங்கின் மண்டல துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், கரூர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு பசுபதி செந்திலை அதிரடியாகக் கைது செய்தனர். அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கரூரில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.