பயங்கரம்..! லாரி சக்கரத்தில் சிக்கிய பைக்… தேர்வு எழுதச் சென்ற மாணவர் உடல் இரண்டு துண்டாகி பலி…!!

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நடைபெற்ற கோர விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவர் உடல் சிதைந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்லி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சாந்தனு நாராயண் அம்போர், கடந்த 12-ஆம் தேதி காலை தனது பி.எஸ்சி (B.Sc) தேர்வு எழுதுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி, சாந்தனுவின் பைக் மீது மோதியதுடன் அவர் உடல் மீதும் ஏறியது.

இந்த பயங்கர விபத்தில் சாந்தனுவின் உடல் இரண்டு துண்டுகளாகப் பிளந்து, அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தேர்வெழுதச் சென்ற மாணவர் பாதியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளன.