ஒலிம்பிக் போட்டி தொடங்கி “3 நாட்களில் 10,000 ஆணுறைகள் காலி” எப்போ புது ஸ்டாக் கொடுப்பீங்க..? வீரர்கள் குமுறல்..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 மிலான்-கோர்டினா (Milan-Cortina) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் மூன்றே நாட்களில் தீர்ந்து போனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2,900 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்காக ஏற்பாட்டாளர்கள் தொடக்கத்தில் வழங்கிய 10,000 ஆணுறை பொதிகள், எதிர்பாராத வேகத்தில் காலியாகிவிட்டன.

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள வீரர்கள், “சப்ளை மூன்றே நாட்களில் முடிந்துவிட்டது, புதிய ஸ்டாக் எப்போது வரும் என்று தெரியவில்லை” எனப் புகாரளித்துள்ளனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 3 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (10,000 மட்டும்) வழங்கப்பட்டதே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது புதிய ஆணுறைகளைத் தருவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒலிம்பிக் கமிட்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.