தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். அவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் இருந்து வருகிறார். இப்போது மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் ஆகிய படங்களை செல்வராகவன் டைரக்ட் செய்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, புதுப்பேட்டை 2 படம் நிச்சயமாக உருவாகும்.
ஆனால் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் உருவாவது என் கையில் இல்லை. இந்த படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால் அது எளிமையானது தான். 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மெண்டல் மனதில் படங்கள் ஆகிய 2 படங்களும் இந்த ஆண்டில் திரைக்கு வந்துவிடும். இதுதவிர புதிதாக ஒரு கதையும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று இயக்குனர் செல்வராகவன் கூறினார்.
