பெரும் அதிர்ச்சி..! “இனிமேல் சவப்பெட்டியோடு தான் போகணும்” கோவை சத்யனின் விமர்சனத்தால் கடும் அப்செட்டில் விஜய்…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை முன்வைத்து தவெக நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தனது எக்ஸ் (X) தளத்தில், “தவெக கூட்டத்திற்கு செல்வதாக இருந்தால், இனிமேல் சவப்பெட்டியோடு தான் செல்ல வேண்டும்” என்று பதிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களின் உயிரிழப்பை அரசியல் ரீதியாக இழிவுபடுத்துவதாகக் கூறி தவெக ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபகாலமாக தவெக தலைவர் விஜய் மீது மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் தனிநபர் விமர்சனங்கள் எல்லை மீறிச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை த்ரிஷாவிடமிருந்து விஜய் வெளியே வர வேண்டும்” என்று தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்திருந்தது பெரும் சர்ச்சையானது. அந்த வரிசையில், தற்போது கோவை சத்யனின் கருத்தும் மிகக் காட்டமான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகைய நாகரீகமற்ற பேச்சுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதுடன், தேர்தல் களம் தரம் தாழ்ந்து செல்வதையே காட்டுவதாக நடுநிலையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.