“அப்பாவா? அரசியலா?”…. ராமதாஸ் கதை முடிந்தது… மதுரையில் அன்புமணி வீசிய அணுகுண்டு… அதிர்ச்சியில் தைலாபுரம்..!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக அரசு கடந்த தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்புமணி, இதனால் அரசு ஊழியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், ஊழல் மலிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சி தமிழக வரலாற்றிலேயே மிகவும் மோசமானது என்று விமர்சித்தார்.

   

கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், திமுக கூட்டணி ஒற்றை இலக்க இடங்களை மட்டுமே பெறும் என்றும், திமுக கூட்டணியில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வருவதாகவும் அவர் கணித்துள்ளார்.

   

குறிப்பாக, பாமகவில் மீண்டும் டாக்டர் ராமதாஸுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது முடிந்து போன கதை” என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்தார். ராமதாஸ் உடனான அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டதாக அன்புமணி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.