தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் டி 55 படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக அவர் நடிக்கிறார். மேலும் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தின் கதாநாயகியும் ஸ்ரீலீலா என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ லீலா சினிமாவில் நடித்துக் கொண்டே எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவரது குடும்பத்தில் உள்ள பலரும் பெரிய துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். அதனால் சினிமாவில் நடித்தாலும் கண்டிப்பாக டாக்டருக்கு படித்து முடிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஸ்ரீலீலாவிடம் கூறியிருந்தனர்.
அதை ஒரு சவாலாக ஏற்று தற்போது மருத்துவ படிப்பை நடிகை ஸ்ரீலீலா முடித்திருக்கிறார். நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் நடிகை ஸ்ரீலீலா டாக்டர் பட்டம் பெற்றார். அந்த போட்டோக்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் சாய் பல்லவி அதிதி ஷங்கர் வரிசையில் இப்போது ஸ்ரீலீலாவும் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
