“புகை பிடிக்காதீர்கள்” உங்க உயிர் போனா பரவாயில்லை.. எங்க பெட்ரோல் முக்கியம்… பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்ட ‘பகீர்’ எச்சரிக்கை பலகை..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love
பெட்ரோல் பங்க் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்த வினோதமான எச்சரிக்கை பலகை, சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக “புகைபிடித்தால் உயிருக்கு ஆபத்து” என்ற வாசகத்தையே நாம் பார்த்திருப்போம், ஆனால் இங்கு “உங்கள் உயிர் விலைமதிப்பற்றதாக இருக்கலாம், ஆனால் எங்கள் பெட்ரோல் மிக மதிப்புடையது” என நகைச்சுவை கலந்து, அதே சமயம் அழுத்தமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. எரிபொருளின் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை காரணமாக, சிறிய அளவிலான அஜாக்கிரதை கூட பெரிய விபத்துக்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெட்ரோல் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகளைப் பற்றி தெரிந்துகொள்வது அனைவருக்கும் அவசியம்.