“துணை முதல்வர் பதவி + கோடிக்கணக்கில் நிதி”… பாஜகவின் ‘மெகா ஆஃபர்’… அமித்ஷாவே நேரில் வந்தும் நோ சொன்ன விஜய்….!

By Nanthini on மாசி 11, 2026

Spread the love

பாஜகவின் அதிகாரப்பூர்வ அழைப்புகளை நடிகர் விஜய் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாகத் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யை இணைக்க பாஜக மேலிடம் பலகட்டத் திட்டங்களைத் தீட்டியதாகவும், அதன் ஒரு பகுதியாக அமித்ஷா நேரடியாகவே ஒரு ‘மெகா டீலிங்’ குறித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் பெரும் தொகையிலான தேர்தல் நிதி உதவி, ஆட்சி அமைக்கும் பட்சத்தில் துணை முதல்வர்  பதவி மற்றும் சில முக்கிய அரசியல் வாக்குறுதிகள் அந்தப் பேரத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுவதால், அவரைத் தங்கள் பக்கம் இழுக்க டெல்லி மேலிடம் அதீத ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், பாஜகவின் இந்த வசீகரப் பேரங்களுக்கு விஜய் கிஞ்சித்தும் செவிசாய்க்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை அறிவித்த போதே, பாஜகவை ‘கொள்கை எதிரி’ எனத் பகிரங்கமாகத் தோலுரித்துக் காட்டிய விஜய், அமித்ஷாவிடம் தனது முடிவை மிக உறுதியாக ‘நோ’ என்று கூறி மறுத்துவிட்டதாகப் பேசப்படுகிறது. திராவிட மண்ணில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்பதில் தெளிவாக இருக்கும் விஜய், எந்தச் சூழலிலும் தனது அடிப்படை நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.