நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை தரும் இளம் நடிகராக உள்ளார். கோமாளி படத்தை இயக்கிய அவர் பிறகு கதாநாயகனாக நடித்த லவ் டுடே டிராகன் டியூட் போன்ற படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – எல்ஐகே என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு காதலர் தினத்துக்கே ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட எல்ஐகே படம் ஓராண்டு கடந்தும் இன்னும் திரைக்கு வரவில்லை. வருகிற 19ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்ட நிலையில் எல்ஐகே படம் இப்போது மார்ச் 27ம் தேதிக்கு ரிலீஸ் என ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதால் இந்த திடீர் முடிவை தயாரிப்பாளர் லலித்குமார் எடுத்ததாக கூறப்படுகிறது.
