actor suriya

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 47வது படம் – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

By Elango on மாசி 9, 2026

Spread the love

நடிகர் சூர்யா கடைசியாக கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதன்பிறகு அவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. சூர்யா 47 என்ற இந்த படத்தில் சூர்யா சிங்கம் படத்துக்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற 2027ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.