Pookki

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் பூக்கி… இந்த படத்தில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

By Elango on மாசி 9, 2026

Spread the love

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார். அவரது நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் பூக்கி. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் அஜய் திசான் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற 13ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தில் நடிகர் சிம்பு பேசிய பழைய நேர்காணல் ஒன்று சில நிமிடங்கள் வருகிறது. இதுகுறித்து தணிக்கை குழு கேள்வி எழுப்பிய நிலையில் நடிகர் சிம்புவிடம் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். அவர் அமெரிக்காவில் உள்ள நிலையில், படத்தை அனுப்புங்க நானும் பார்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

   

அதன்பிறகு பூக்கி படம் நடிகர் சிம்புவுக்கு அனுப்பபட்டு அவர் படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு படம் மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள், படத்தில் வரும் எனது பேட்டியை பயன்படுத்த ஆட்சேபனை இல்லை. தாராளமாக பயன்படுத்திக்குங்க என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். இது பூக்கி படம் பார்க்கும் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.