பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், இன்று காலை 9.15 மணியளவில் வகுப்பறையில் தன்னுடன் பயிலும் சந்தீப் கவுர் என்ற சக மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
🚨 First-year law college student allegedly shot a fellow student inside a classroom in Punjab’s Tarn Taran district
Accused identified as Prince Raj opened fire on Sandeep Kaur, he died on the spot. Prince later shot himself with the same weapon and was taken to hospital in… pic.twitter.com/sDghCJiYr0
— Nabila Jamal (@nabilajamal_) February 9, 2026
இதையடுத்து, பிரின்ஸ் ராஜ் தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சுட்டுக் கொல்லப்பட்டு, மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை; போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
