BREAKING: தமிழக கபடி வீராங்கனை விபத்தில் மரணம்…. இளம் வயதிலேயே சிதைந்த கனவுகள்….!

By Nanthini on மாசி 9, 2026

Spread the love

தமிழக விளையாட்டுத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகத் திகழ்ந்த கபடி வீராங்கனை தீபிகாவின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பின்னால் வந்த கூரியர் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.

தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு MCA பயின்று வந்த தீபிகா, தமிழ்நாடு கபடி அணியின் முக்கிய வீராங்கனையாகப் பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர். ஒரு துடிப்பான விளையாட்டு வீராங்கனையின் கனவுகள் இவ்வளவு சீக்கிரம் சிதைந்து போனது அவரது குடும்பத்தினரிடமும், விளையாட்டு ஆர்வலர்களிடமும் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.