“நான் அந்த சாதிக்காரி.. என்கிட்ட வச்சுக்காத” வங்கியிலேயே வாடிக்கையாளரை மிரட்டிய பெண் ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு HDFC வங்கி கிளையில், ஆஸ்தா சிங் என்ற ஊழியர் வாடிக்கையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது சாதி அடையாளத்தைக் குறிப்பிட்ட அவர், “நான் ஒரு தாகூர் (Thakur), என்கிட்ட தேவையில்லாத பேச்செல்லாம் வச்சுக்காத” என்று ஹிந்தியில் (“Thakur hoon main, bakchodi mat karna mere se”) மிகக் கேவலமான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார். மேலும், அந்த வாடிக்கையாளரைத் தாக்க முயன்றது அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் கேமராக்களில் பதிவாகியுள்ளது.

வங்கி வளாகத்திலேயே பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய ஊழியர், தனது அதிகாரத்தையும் சாதியையும் பயன்படுத்தி அநாகரீகமாக நடந்துகொண்டது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக HDFC வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.