“வயிற்றில் இருந்த தையல் தழும்புகள்” முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… RTI போட்டு மனைவியின் ரகசியத்தை உடைத்த கணவர்… பெண் வீட்டார் மறைத்த உண்மையால் வெடித்த சண்டை…!!

By Soundarya on மாசி 9, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான கையோடு புதுமாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் கடந்த கால ரகசியத்தைக் கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமாகத் திருமணம் முடிந்த நிலையில், முதலிரவின் போது மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தையல் தழும்புகள் இருப்பதை கணவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் கேட்ட கேள்விகளுக்கு மனைவி தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததால், கணவருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. உண்மையை அறியத் துடித்த அவர், ஒரு அதிரடியான சட்டப் போராட்டத்தைக் கையில் எடுத்தார்.

தனது மனைவியின் பிறந்த வீட்டுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனைவியின் மருத்துவ வரலாறு குறித்த விவரங்களைக் கோரி விண்ணப்பித்தார். அதற்கு வந்த பதிலைக் கண்டு கணவர் நிலைகுலைந்து போனார். திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவி கருக்கலைப்பு செய்திருந்தது அந்த மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதியானது. இந்த விவகாரம் தற்போது இரு குடும்பங்களுக்கிடையே பெரும் மோதலாக வெடித்துள்ளது. முறையான தகவல்களை மறைத்துத் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.