Actor Karunas

உன்கிட்ட பேச என்ன இருக்குது?… சொந்த மகனிடமே இப்படி சொன்ன காமெடி நடிகர் கருணாஸ் – நடந்ததை சொன்ன அவரது மகன் கென் கருணாஸ்!

By Elango on மாசி 8, 2026

Spread the love

காமெடி நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் மற்றும் விடுதலை 2 போன்ற படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்திருந்தார். இவர் நெடுஞ்சாலை என்ற படத்தில் சிறுவனாக நடித்திருந்தார். இப்போது யூத் என்ற படத்தில் கதாநாயகனாக கென் கருணாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனரும் அவர்தான். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் அவரே சொந்த குரலில் பாடியும் இருக்கிறார்.

சமீபத்திலர் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கென் கருணாஸ் கூறியதாவது, சின்ன வயசுல இருந்தே அப்பா என்னிடம் அவ்வளவா பேச மாட்டார். கொரோனாவுக்கு அப்புறம் தான் என்கிட்ட பேசவே ஆரம்பிச்சார். அப்புறம் நிறைய நேரம் இரண்டு பேரும் பேசுவோம். அப்போ தான் அப்பாகிட்ட நான் கேட்டேன். ஏன் என்னிடம் சின்ன வயசுல நீ பேசவே இல்லை என்று கேட்டேன். அதுக்கு அப்பா, இல்லை நீ வளர்ந்து 18 வயசு ஆகும்போது பேசலாம்ன்னு இருந்தேன். சின்ன வயசுல உன்னிடம் பேச எனக்கு எதுவுமே இல்லைன்னு சொன்னார் என்று நடிகர் கென் கருணாஸ் கூறியிருக்கிறார்.