பாஜக மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாநில அமைப்பாளர் சென்னை சி.ராஜா, கட்சியின் தலைமையின் முறையான அனுமதி இன்றி புதிய நிர்வாகிகளை நியமித்ததாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அந்த நிர்வாகியின் செயல் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாக இருக்கிறது. இதன் காரணமாக, அவர் தற்காலிகமாகப் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனக் கூறியுள்ளார். உட்கட்சி விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
