Dance master Brinda

விடியும் வரை காருக்குள் சிக்கிக் கொண்ட டான்ஸ் மாஸ்டர் பிருந்தா… அவரை பிடித்து வைத்து கண்டிஷன் போட்ட பிரபல கதாநாயகிகள்!

By Elango on மாசி 8, 2026

Spread the love

தமிழில் ஏராளமான படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிசெய்து வருபவர் பிருந்தா. இவர் டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி. நம்மவர் படத்தில் நடிகர் நாகேஷின் மகளாக பிருந்தா சில காட்சிகளில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியதாவது, ஒருமுறை நான் திரிஷா நயன்தாரா ஒரே காரில் இருந்தோம். விடிய விடிய 3 பேரும் காருக்குள் இருந்தபடி அரட்டையடித்து கொண்டும் சில இடங்களுக்கு காரில் சென்றும் வந்தோம். ஒரு கட்டத்தில் அதிகாலை 5 மணி ஆகிவிட்டது.

அதனால் என்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று சொன்னேன். உடனே திரிஷாவும் நயன்தாராவும் காரை எடுத்துக்கொண்டு சரி வாங்க போவோம் என்று சொல்லிவிட்டு வேறு பாதையில் காரில் சென்றனர். உடனே பயந்து போன நான், என்ன கார் வேற ரூட்டில் போகுது என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எங்களுக்கு சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவு கஷ்டமான நடன ஸ்டெப்புகளை கொடுப்பீர்கள்? இனி அப்படி கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள். வீட்டில் கொண்டு வந்து விடுகிறோம் என்று மிரட்டினர். வேறு வழியின்றி நானும் சரி என்று சொன்னேன். அதன்பிறகு தான் என்னை வீட்டில் கொண்டு போய் விட்டார்கள் என்று டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியிருக்கிறார்.