“நேருக்கு நேர் மோதல்” விஜய்யைச் சுற்றி வளைக்கத் துடிக்கும் திமுக… விக்கிரவாண்டி முதல் நாகை வரை தயாராகும் ‘செக்’… அதிரும் அரசியல் வட்டாரம்..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் அல்லது நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. விஜய்யை ஒரு முக்கிய அரசியல் சவாலாகக் கருதும் திமுக, அவர் எந்தத் தொகுதியில் களம் கண்டாலும் அங்கு நேரடியாகத் தனது வேட்பாளரை நிறுத்திப் பலப்பரீட்சை நடத்தத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் விஜய்யின் அரசியல் எழுச்சியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த திமுக மேலிடம் வியூகம் வகுத்துச் செயல்படுகிறது.

குறிப்பாக, விஜய் ஒருவேளை நாகப்பட்டினம் தொகுதியைத் தேர்வு செய்தால், அங்கு தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கூட்டணிக் கட்சியான விசிகவிடம் இருந்து அத்தொகுதியைத் திரும்பப் பெற திமுக ஆயத்தமாகி வருகிறது. விசிகவுக்குப் பதிலாக வேறு ஒரு மாற்றுத் தொகுதியை ஒதுக்கிவிட்டு, நாகையில் திமுக நேரடியாகக் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளது. தனது சொந்த பலத்தைப் பரிசோதிக்கவும், விஜய்க்கு எதிரான போட்டியை ஒரு நட்சத்திர மோதலாக மாற்றவும் திமுக இத்தகைய அதிரடி முடிவுகளை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.