திடீர் ஷாக்..! “யாரும் பனையூருக்கு வரவேண்டாம்” தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் பரபரப்பு அறிக்கை..!!

By Soundarya on மாசி 7, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களுக்கான விருப்ப மனு விநியோகம் இன்று மதியம் 12.00 மணிக்கு தொடங்கியது. கட்சித் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், தொடங்கிய இரண்டரை மணி நேரத்திலேயே, அதாவது 2.30 மணிக்குள் விருப்ப மனுக்கள் காலியாகின. இதைத் தொடர்ந்து, விருப்ப மனு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.