தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. லிங்கமுத்து (75) உடல்நலக்குறைவு காரணமாக பிப்ரவரி 06, 2026 அன்று காலமானார். இவரது மறைவு செய்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடையேயும், குடியாத்தம் தொகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் (தனி) தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மக்கள் நலப் பணிகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட லிங்கமுத்து, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.