அட்ராசக்க..! இங்கிலாந்தை துவம்சம் செய்த வைபவ் சூர்யவன்ஷி… அதிவேக 150 ரன்கள் குவித்து உலக சாதனை..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

ஜிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய அவர், சர்வதேச கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது அபார ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் மிகக்குறைந்த பந்துகளில் 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, இங்கிலாந்து வீரர் பென் மேஸ் 98 பந்துகளில் 150 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது; தற்போது அந்த சாதனையைத் தகர்த்து வைபவ் சூர்யவன்ஷி முதலிடம் பிடித்துள்ளார்.