Director Mysskin

என்னது, ராமராஜன் கேரக்டரில் தான் சேரன் நடிச்சாரா? – இயக்குனர் மிஷ்கின் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 6, 2026

Spread the love

கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இவருக்கு கிராமத்து நாயகன் என்கிற பட்டப் பெயரும் அப்போது இருந்தது. ஏனெனில் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே கிராமத்து படங்கள்தான். பாடல் காட்சிகளில் மட்டுமே விதவிதமான முகத்தில் அடிக்கும் நிறங்களில் பேண்ட் சட்டை அணிந்து இவர் காணப்படுவார். ராமராஜன் கலர் என்று உறுத்துகிற நிறங்களை இன்றும் பலர் சொல்வதுண்டு.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, நான் யுத்தம் செய் என்ற படத்தின் கதையை முதலில் நடிகர் ராமராஜனுக்கு தான் எழுதினேன். மதுரையில் இருந்து ஒரு சிஐடி ஆபிசர் வந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். ஆனால் தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக்கல. அப்புறம்தான் சேரனை போய் பார்த்தேன். என் படங்கள் பார்த்து இருக்கியான்னு சேரன் என்னை கேட்டார். ஆட்டோஃகிராப் பார்த்தேன். ஆனால் நான் தூங்கிட்டேன் சார்ன்னு சொன்னேன் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.