நாங்க ரெடி, அவங்க ரெடியா..? பாகிஸ்தான் புறக்கணித்தாலும் இந்தியா களமிறங்கும்… கேப்டன் சூர்யகுமார் ஓப்பன் டாக்..!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக உள்ளதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று (பிப்ரவரி 5, 2026) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “எங்கள் மனநிலை மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் விளையாட மறுக்கவில்லை, அவர்கள்தான் (பாகிஸ்தான்) மறுக்கிறார்கள்” என்று கூறினார்.

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக இந்திய அணியின் விமான டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், அட்டவணைப்படி அணி அங்கு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த லீக் ஆட்டத்தை மட்டும் தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.