“என் காதலை ஏத்துக்க மாட்டீங்களா டீச்சர்” ஆசிரியையின் உதட்டை கடித்து துப்பிய கொடூரம்… பதறவைத்த பள்ளி மாணவனின் பகீர் வீடியோ காட்சி…!!

By Soundarya on மாசி 6, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் (Mainpuri) 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன், தனது ஒருதலைக் காதலை ஏற்காத ஆசிரியை மீது நடத்திய கொடூரத் தாக்குதல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் ஆசிரியை தனியாகச் சென்றபோது அவரை வழிமறித்த அந்த மாணவன், அவரது கழுத்தைப் பிடித்து இழுத்து முகத்தில் பலமாகத் தாக்கியதோடு, ஆசிரியையின் உதட்டையும் கடித்துக் குதறியுள்ளான்.

கடுமையான காயமடைந்த அந்த ஆசிரியை தற்போது ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மாணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த மாணவன் ஏற்கனவே ஆசிரியையைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததும், அதனால் அவர் முன்னரே பள்ளியை மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.