‘என் சாவுக்கு இவங்க தான் காரணம்’…. 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை… கண்ணீரை வரவழைக்கும் கடைசி ஆடியோ….!

By Nanthini on மாசி 5, 2026

Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே, தனது 6 மாதக் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவ்யா (20), தனது கைக்குழந்தை சமீராவைத் தூக்கிக்கொண்டு வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியிடையே மாமியார் மற்றும் மாமனாரின் கொடுமைகளே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன்னதாக காவ்யா சமூக வலைதளத்தில் உருக்கமான ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவர் சிவபாலன் ஒரு நல்ல மனிதர் என்றும், ஆனால் அவரது பெற்றோரான செந்தமிழ்ச்செல்வி மற்றும் பழனித்துரை ஆகியோர் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவர் அந்தப் பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

   

இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மாமியார் செந்தமிழ்ச்செல்வியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மாமனார் பழனித்துரையைத் தேடி வரும் நிலையில், ஒரு இளம் தாயும் பச்சிளம் குழந்தையும் அநியாயமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.