actor Rajinikanth

கூலி படம் குறித்து வெளிப்படையாக பேசிய ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா – என்ன இப்படி சொல்லிட்டாங்க என ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 5, 2026

Spread the love

சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா கூலி படம் குறித்து தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, எனக்கு படத்தில் கடைசி 10 நிமிடங்கள் பிடித்திருந்தது. அதில் அப்பாவை இளமையான லுக்கில் டீ ஏஜிங் செய்து காட்டியிருப்பார்கள்.

ஆனால் தலைவர் ரஜினிகாந்த் ரசிகையாக அவரிடம் இருந்து இன்னும் நான் நிறைய எதிர்பார்க்கிறேன். கூலி எனக்கு பிடித்த படம்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த டாப் பேவரைட் படமாக அது இருக்காது. இப்போதெல்லாம் மக்கள் வன்முறையை அதிகமாக ரசிப்பதில்லை என்பது என் கருத்து என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.