துரோகிகளுக்கு முற்றுப்புள்ளி..? சசிகலாவின் புதிய அரசியல் அவதாரம்… தமிழக அரசியலில் பெரும் திருப்பம்..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சசிகலாவின் அரசியல் நகர்வுகள் மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக-வை மீட்டெடுப்பதே தனது இலக்கு என்று கூறிவந்த சசிகலா, தற்போது தனது ஆதரவாளர்களை மாவட்ட வாரியாக நேரில் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் தேர்தலில் தனது ஆதரவாளர்களைத் தனித்துப் போட்டியிட வைப்பது அல்லது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அண்மையில் அஞ்சலி செலுத்திய சசிகலா, “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்துவதே தனது நோக்கம்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். இதற்கேற்ப, மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்க அல்லது தனது தலைமையிலான வேட்பாளர்களைக் களமிறக்க அவர் ஆயத்தமாகி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கட்சியின் பெயர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.