அட்ராசக்க..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள்… எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடி வாக்குறுதி..!!

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் தேர்தலுக்கான அக்கட்சியின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப். 4) வெளியிட்டார். இந்த அறிவிப்பில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், சிறுபான்மையின மகளிருக்கு வட்டி இல்லாத கடன் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுறவு கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மையமாக வைத்து அறிவிக்கப்பட்டுள்ள இதர வாக்குறுதிகளில், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் தொகையை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளிருக்கான பிரத்யேகத் திட்டங்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கான பொருளாதாரச் சலுகைகளை உள்ளடக்கிய இந்த இரண்டாம் கட்டப் பட்டியல், அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.