“இரட்டை இலக்கத்தில் தொகுதி வேண்டும்” அடம்பிடிக்கும் CPM கட்சி… ஸ்டாலின் எடுக்கபோகும் முடிவு என்ன..??

By Soundarya on மாசி 4, 2026

Spread the love

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் தேர்தலில் தங்கள் கட்சி இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கேற்ப திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், வரவிருக்கும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்த அணியே மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கட்சியின் வளர்ச்சியை முன்னிறுத்தி அதிக இடங்களைக் கோர சிபிஎம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கான தொடக்கப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.