பஸ்சில் ரயிலில் கூட்டமான இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்தில் அச்சம் காரணமாக தங்களது எதிர்ப்பை காட்டாமல் விட்டு விடுகின்றனர். அதுவே பல ஆண்களுக்கு அந்த தவறை செய்யும் துணிச்சலை தந்து விடுகிறது. இதுகுறித்து சமீபத்தில் சீனியர் நடிகை ரேவதி ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரேவதி கூறியதாவது, நான் 11வது படித்துக் கொண்டிருந்தபோது பஸ்சில் சென்றேன். அப்போது என்னை ஒருவன் தவறாக தொட்டான். நான் அப்போது யாருக்கும் பயப்படவில்லை. அவனை அந்த இடத்திலேயே பளார் என அடித்தேன். அப்போது அங்கிருந்த அனைவரும் எனக்கு துணையாக இருந்தார்கள்.
அந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா தான். யாராவது தவறாக நடந்து கொண்டால் பயப்படாமல் தைரியமாக அடி என்று சொன்னார்கள். அதைத்தான் நான் அன்று செய்தேன். இதுபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோர் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நடிகை ரேவதி கூறியிருக்கிறார்.
