மனிதகுலத்திற்கே அவமானம்..! சாலையில் உயிருக்கு போராடிய நபர்… 2 இளைஞர்கள் வந்து செய்த கீழ்த்தரமான காரியம்… சிசிடிவி காட்சியால் குலுங்கிப்போன இணையம்…!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love
டெல்லியில் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் சமூகத்தையே உலுக்கியுள்ளது. சாலையில் திடீரென மயங்கி விழுந்த ஒருவருக்கு உதவி செய்ய முன்வராமல், அங்கிருந்த இரு இளைஞர்கள் அவரது அலைபேசியைத் திருடிச் சென்றது சிசிடிவி காட்சிகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அவரது பைகளைச் சோதித்துவிட்டு, எதுவும் கிடைக்காததால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்த வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால் அந்த நபர் உயிரிழந்தார் என்பது மிகவும் துயரமான நிகழ்வு. இது போன்ற சூழ்நிலைகளில் உடனடியாக மருத்துவ உதவி அளிப்பது மிகவும் முக்கியம்.