தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரேவதி. இன்னும் நடிகை ரேவதி போன்ற ஒரு நல்ல நடிகையாக பெற வேண்டும் என்றும் சொல்லும் நடிகைகளும் இருக்கின்றனர். அந்தளவுக்கு கவர்ச்சி ஆபாசமின்றி நடித்த அவர் திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் ஆடை சுதந்திரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை ரேவதி கூறியதாவது, எந்த விஷயமாக இருந்தாலும் தனிமனிதர்கள் சொந்தமாக அவர்கள் விருப்பத்தின் படி முடிவு எடுக்க வேண்டும். ஒருவரை கைநீட்டி அடிப்பதற்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லை. யார் மீதும் நமக்கு எந்த உரிமையும் இல்லை.
ஒரு பிகினி உடையணிந்து ஒரு பெண் நடந்து செல்ல ஆசைப்பட்டால் அதில் என்ன தப்பு இருக்கு? நாம பார்க்கக் கூடிய பார்வையில் நம்ம மனசில் தான் அப்படி இருக்கு. ஒரு கல்யாணத்துக்கு எப்படி டிரஸ் பண்ணீட்டு போகணும்? ஒரு பீச்சுக்கு எப்படி டிரஸ் பண்ணீட்டு போகணும்? பீச்சுல வந்து நாம பட்டுப்புடவை கட்டீட்டு கடலுக்குள்ள இறங்க முடியுமா? முடியாது. சோஷியல் மீடியா கம்ப்ளீட்லி டிபரண்ட் டாக். சமூக வலைதங்கள் வந்ததால் இந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் வெளியே தெரிகிறது என்று நடிகை ரேவதி கூறியிருக்கிறார்.
