ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் தங்கள் பணியின் போது சந்திக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் தனது உணவு ஆர்டரை சுடுகாட்டிற்குள் வந்து வழங்குமாறு டெலிவரி ஊழியரை வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியர் அச்சத்தின் காரணமாக உணவை நுழைவாயிலிலேயே பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக உள்ளே வரச் சொன்னது ஊழியரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
அந்தப் பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் சுடுகாட்டில் பார்ட்டி செய்து கொண்டிருப்பதாகக் கூறி, ஊழியரை அங்கு வரவழைத்துள்ளார். சூழ்நிலையின் தீவிரத்தையும் பயத்தையும் உணர்ந்த அந்த டெலிவரி ஊழியர், இறுதியில் அந்த ஆர்டரை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த முழு நிகழ்வும் வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் பரவிய நிலையில், பார்ப்பவர்களை ஒரு நிமிடம் அதிரச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது ஒரு வேடிக்கையான ‘பிராங்க்’ (Prank) வீடியோவாகத் தோன்றினாலும், இரவு பகல் பாராமல் உழைக்கும் ஒரு சாமானிய ஊழியரை இது போன்ற அச்சமூட்டும் இடத்திற்கு வரவழைத்து விளையாடுவது முறையற்றது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். மனிதநேயமற்ற இத்தகையச் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
