தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் தலைவன் மீதான பற்று மற்றும் கட்சியின் கொள்கைகள் மீதுள்ள ஈடுபாடு காரணமாக, பல தொண்டர்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் தாண்டி கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒரு தொண்டர் தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும், தளபதி விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வலுசேர்க்கவும் தனது வேலையையேத் துறந்து முழுநேர அரசியலில் இறங்கியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“இனி என் வேலை TVK-வில் தான்” என்ற உறுதியோடு அவர் எடுத்துள்ள இந்த முடிவு, கட்சி மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆறு வருடமாக வேலை செய்த நிறுவனத்திலிருந்து விளக்குகிறேன், இனி தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் வேலை செய்யப் போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில் கட்சிக்காக தன் வேலையை ராஜினாமா செய்த தொண்டரின் ராஜினாமா கடிதம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
