“நீங்க அந்த கட்சியா..?” செய்தியாளர் கேள்வியால் எகிறிய ஓபிஎஸ்… மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு..!!

By Soundarya on மாசி 3, 2026

Spread the love

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது குறித்த கேள்விக்குக் கோபத்துடன் பதிலளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவரிடம், ஒன்றிய பட்ஜெட் குறித்துக் கேட்டபோது, அது தொடர்பான விரிவான அறிக்கையை இன்று வெளியிடப் போவதாகத் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “ஓபிஎஸ் தவெகவில் இணைவதே அவருக்கு நல்லது என அக்கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்களே?” எனக் கேள்வி எழுப்பினார். இதனால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ், “நீங்கள் தவெகவா?” என்று அந்தச் செய்தியாளரிடமே திருப்பிக் கேட்டுவிட்டு, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக் குழப்பங்களுக்கு இடையே, தவெக தொடர்பான இந்தக் கேள்வி அவரைப் பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளது.