அதிகாலை டீ குடிக்கச் சென்ற மாணவர்கள்… நொடிப்பொழுதில் காரில் வந்த எமன்… துடிதுடிக்க பறிபோன 3 உயிர்… சோக சம்பவம்…!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள லக்கூரில் இயங்கி வரும் தனியார் வேளாண் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள், விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் விடுதியில் அமர்ந்து தங்கள் பாடப்பிரிவு தொடர்பான பதிவேடுகளை (Record notes) எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள், சோர்வை நீக்க டீ குடிப்பதற்காக பேராசிரியருக்குச் சொந்தமான காரில் கல்லூரியின் பின்பக்க வாசல் வழியாக வெளியே சென்றுள்ளனர். ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் டீ குடித்துவிட்டு மீண்டும் கல்லூரிக்குத் திரும்பியபோது இந்த விபரீதம் நிகழ்ந்தது.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் அருகே மாணவர்கள் சென்ற கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய கார் சாலையின் மையத்தடுப்பைத் தாண்டி, எதிரே வந்த சுற்றுலா பேருந்தின் மீது பலமாக மோதியது. அந்தப் பேருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றுவிட்டு பக்தர்களுடன் பெரம்பலூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து அப்பளம்போல நொறுங்கியது.

   

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தரணிசெல்வன், நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய மூன்று மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற சசிக்குமார் மற்றும் உடன் இருந்த ராஜேஷ், மதுப்பிரியன் ஆகிய மூவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

அதிகாலையில் தேநீர் அருந்தச் சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை அல்லது படிப்புச் சுமைக்கு இடையே சற்று இளைப்பாற நினைத்த மாணவர்களின் பயணம், அவர்களது வாழ்வின் கடைசிப் பயணமாக மாறியது உறவினர்களிடையேயும் சக மாணவர்களிடையேயும் மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.