actor sathyaraj

32 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்படும் சத்யராஜின் மாஸ்ஹிட் படம் – அரசியல் நையாண்டியாக சட்டசபை தேர்தல் நேரத்தில் திரைக்கு வருதே?

By Elango on மாசி 2, 2026

Spread the love

நடிகர் சத்யராஜ் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அமைதிப்படை. கடந்த 1994ம் ஆண்டில் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சத்யராஜ் 2 வேடங்களில் நடித்திருந்தார். கஸ்தூரி சுஜாதா மணிவண்ணன் எஸ்எஸ் சந்திரன் என பலர் நடித்த இந்த படத்தில் அரசியல்வாதியாக சத்யராஜ் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது.

குறிப்பாக அரசியல்வாதிகளின் உண்மையான முகமும் அவர்களின் அரசியல் ஆட்டங்களையும் சொல்லும் கதைக்களமாக இந்த படம் தமிழகத்தில் அன்றைய அரசியலை நையாண்டி செய்திருந்தது. சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் விரைவில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அமைதிப்படை படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.