Actor Ram Charan

மனைவி, இரட்டை பிள்ளைகளை பார்க்க ஆவலாக வந்த நடிகர் ராம்சரண்… பிரபல மருத்துவமனை முன்பு சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு!

By Elango on மாசி 2, 2026

Spread the love

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவரது மனைவி உபாசனா. கடந்த 2012ம் ஆண்டு திருமணம் ஆனது. 11 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் கிளீன்காரா. கடந்தாண்டில் உபாசனா மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் நேற்று முன்தினம் உபாசனாவுக்கு பிரபல தனியார் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளாக ஆண் குழந்தை பெண் குழந்தை பிறந்தது. இதனால் சிரஞ்சீவி ராம்சரண் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் ஓய்வில் இருந்து வரும் தனது மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளை காண்பதற்காக தனது பெண் குழந்தையுடன் நடிகர் ராம்சரண் அந்த மருத்துவமனைக்கு வந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய அவரை அங்கு திரண்டிருந்த ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட ராம்சரண் கையில் இருந்த பெண் குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.