பெரும் பரபரப்பு..! “இந்தியாவுடன் விளையாட மாட்டோம்” பாகிஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகவும், ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி விளையாடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவுக்கு வங்கதேச அணியை ஐசிசி தொடரிலிருந்து நீக்கியதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததையடுத்து, அந்நாட்டிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை ஐசிசி சேர்த்தது. ஐசிசியின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் இந்தத் தொடர் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளது.