மதுரை அருகே காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர் தன்னிடம் பேச மறுத்த காரணத்தால், 21 வயது இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோவில் குருவித்துறை தெற்குத் தெருவைச் சேர்ந்த காசி என்பவரது மனைவி ஜீவிதா, தனது பெற்றோர் தங்களை ஒதுக்கி வைத்திருந்ததால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், தனது பிறந்த வீட்டினரின் ஆதரவு கிடைக்காத ஏக்கத்தால் ஜீவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காடுபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
