“ஒரே வாரத்தில் 2000 விக்கெட் அவுட், இபிஎஸ் அடித்த சிக்ஸர்”.. நிலைகுலைந்த திமுக…. 2026 தேர்தலுக்கு முன்பே ஆரம்பித்த மெகா ட்விஸ்ட்….!

By Nanthini on மாசி 1, 2026

Spread the love

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகளிடையே நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் போட்டி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக, ஓபிஎஸ் அணி மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற பல்வேறு அமைப்புகளிலிருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சேர்க்கை, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கட்சித் தாவல்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தை மையமாக வைத்தே அரங்கேறி வருகின்றன. வரும் தேர்தலில் கொங்கு பகுதியை முழுமையாகத் தன்வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில், அங்கிருந்து இத்தனை பேர் அதிமுகவிற்கு மாறுவது ஆளுங்கட்சிக்குச் சிறு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கோட்டை என கருதப்படும் பகுதிகளில் அதிமுக தனது பிடியை மீண்டும் பலப்படுத்துவது, வரும் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கும் என்பதற்கு அறிகுறியாக அமைந்துள்ளது.